2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

'பழங்கள், காய்கறிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும்'

Super User   / 2011 ஜனவரி 21 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுமையா றிஸ்வி)

அனைத்து பழங்களையும் காய்கறிகளையும் வாகனத்தில் கொண்டு செல்லும் போது பிளாஸ்திக் மற்றும் கார்ட்போட்களில் அல்லது பலகையிலான பொட்டிகளில் வைக்கப்பட்டு கொண்டு செல்ல வேண்டும் என உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இவ்வாறு கொண்டு செல்வதினால் பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாக்கத்தை குறைக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து நடவடிக்கையின் போது முறையற்ற சேமிப்பு காரணமாக பல மில்லியன் பெறுமதியான பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாகுவதாக அவர் கூறினார்.

போக்குவரத்தின் போது ஏற்படும் நட்டங்களை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் நுகர்வோரின் மீது சுமத்துவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--