2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோரி இலங்கைப் பணிப்பெண்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு சென்ற இலங்கையர்கள் பலர், தம்மை இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு கோரி ஜோர்டான் தலைநகரான அம்மானிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.  

சம்பளம் மறுக்கப்பட்டமை, துஷ்பிரயோகம் போன்ற காரணங்களால் வேலையை விட்டு வந்த 96 ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தூதுவராலயம் தெரிவித்தது.


இந்த ஊழியர்களின் உரிமையை பெற்றுக்கொள்ளவும் இவர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யவும் நாம் முயன்று வருகின்றோம். இவர்கள் வதிவிட அனுமதிக்காலம் முடிந்த பின்னும் இங்கு தங்கியதால் தண்டப்பணம் செலுத்தினால் மாத்திரமே ஜோர்டானை விட்டுச் செல்லுவதற்கு அனுமதிக்கப்படுரென இலங்கையின் தூதுவர் அன்ட்ராயஸ் மொஹொட்டலா கூறினார்.  சிலருக்கு இந்த தண்டப் பணத்திலிருந்து விலக்குப் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஏனையவர்களுக்கு விலக்குப் பெற முயன்று வருகின்றோமெனவும் அன்ட்ராயஸ் மொஹொட்டலா 'த ஜோர்டான் ரைம்ஸ்' க்கு தெரிவித்தார்.

தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயவென அமைக்கப்பட்ட குழுவினர் 73 பேரை விசாரித்தது. இவர்களில் 22 பேரை அவர்களுக்குரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுத்த பின்னர் இலங்கைக்கு அனுப்பவேண்டுமென இக்குழு சிபாரிசு செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .