2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

அநுராதபுரம் சிறைச்சாலையை நிர்வாகம் செய்வதற்காக புதிய குழு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அநுராதபுரம் சிறைச்சாலையை நிர்வாகம் செய்வதற்காக புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.

சிறைச்சாலையின் தலைமை அதிகாரி; மற்றும் சிரேஷ்ட அத்தியட்சகர் ஆகியோர் தொடர்ந்து பதவி வகிப்பர். ஆனாலும் இவர்களுக்கு மேலாக சிறைச்சாலைக்கு பொறுப்பாக ஒரு சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரியை தான் நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இரு சிறைக்கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் முகமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது, சிறைக்கைதியொருவர் பலியாகியுள்ளதுடன்,  8 சிறைச்சாலை அதிகாரிகளும் 13 சிறைக் கைதிகளும் காயமடைந்துள்ளதாகவும் வி.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.  

இதேவேளை இரு தரப்பினரிடமிருந்தும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன், அறிக்கை நீதிமன்றத்தில் கையளிக்கப்படுமெனவும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த கமகே தெரிவித்தார். மேற்படி தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுமெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--