Super User / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத்தில் இலங்கைப் பெண்ணொருவரும் சிரியாவைச் சேர்ந்த ஆணொருவரும் சட்டவிரோதமான உறவின் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றதுடன் மற்றொரு குழந்தையை கருவிலேயே கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் குவைத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து இவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டபோது 3 மற்றும் 2 வயதான இரு ஆண்குழந்தைகள் அவ்வீட்டிலிருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
'இவ்விருவரும் மேற்படி குழந்தைகள் தமக்குப் பிறந்தவை எனவும் தாம் 5 வருடங்களாக திருமணம் செய்யாமல் கணவன், மனைவியாக இணைந்து வாழ்வதாகவும் ஒப்புக்கொண்டனர்' என ஆலன்பா எனும் குவைத் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தனது காதலி 6 மாத கர்ப்பினியாக இருந்தபோது கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதாக சிரியாவைச் சேர்ந்த மேற்படி ஆண் தெரிவித்துள்ளார்.
5 hours ago
03 Nov 2025
s.v.s.janu Thursday, 17 February 2011 08:22 AM
இந்தப் பெண் !!!
தாய் நாட்டின் பெருமையைக் காப்பாற்றாமல் விட்டதைக் கூட மன்னித்து விடலாம்...
தாய்மையின் பெருமையைக்கூடவா காப்பாற்ற முடியாமல் போனது ?? கொடுமை !!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025