Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலி தாக்கப்பட்ட விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவ்விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டு வருகிறது. விரைவில் இருதரப்பினரும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவார்கள் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக உபேக்ஷாவின் கணவர் மீரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் இன்னும் சமுகமளிக்கவில்லை எனவம் அவ்வதிகாரி கூறினார்.
'பபா' என்ற பெயரில் பிரலமான உபேக்ஷா ஸ்வர்ணமாலி, குடும்ப தகராறொன்றின் காரணமாக தாக்கப்பட்ட நிலையில் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவர் தாக்குதல் காரணமாக முகத்தில் காயமடைந்த நிலையில் தனது கணவருக்கு எதிராக மீரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் வாக்குமூலமொன்றையும் அளித்துள்ளார்.
உபேக்ஷாவுக்கு ஏற்பட்ட ஏற்றபட்ட காயங்கள் பாரியவை அல்ல. எனினும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் முறையான சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
56 minute ago
3 hours ago
4 hours ago