2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஆணி ஏற்றப்பட்ட மற்றுமொரு பணிப்பெண் கராபிட்டிய வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபியாவில் பணியாற்றிய மற்றுமொரு பணிப்பெண,; கைகளில் ஆணி ஏற்றிய நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது இடது கையிலிருந்து நேற்றையதினம்  ஒரு ஆணி அகற்றப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரு ஆணிகள் அகற்ற வேண்டியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

காலியை வசிப்பிடமாகக் கொண்ட இப்பணிப்பெண் கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றியுள்ளார். அவரது வீட்டு எஜமானாரால் துன்புறுத்தல்களுக்குள்ளான நிலையிலேயே அவர்  நாடு திரும்பியுள்ளார்.

தனது வீட்டு எஜமானார் தன்னுடன் தவறாக நடக்க முற்பட்டபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் தனது கைகளில் ஆணி ஏற்றியதாக அப்பணிப்பெண் கூறினார்.

இது தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--