Super User / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்பிற்குள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தமிழக மீனவர்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த 136 தமிழக மீனவர்களின் விடுதலை மகிழ்ச்சி தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்புக்குள் நுழையாமல் இந்திய கடற்பரப்புக்குள் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு தமிழக மீனவர்களுக்கும் ஏனைய பிராந்திய மீனவர்களுக்கும் தான் விசேட வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுடன் வியாழனன்று பேசியபோது, இரு தரப்பு உறவுகளின் பாரிய நலன்களைக் கருத்திற்கொண்டு இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டுமென விசேட வேண்டுகோளை அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.
இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டமைக்காக தான் நன்றி தெரிவிப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.
22 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago