2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வர்த்தக விமான சேவைகளை விமானப்படை விஸ்தரிக்கிறது

Super User   / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

வர்த்தக விமான சேவைகளை விமானப்படை விஸ்தரிக்கவுள்ளதாக விமானப்படை தளபதி எயார் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். இதற்காக  ஸியான் எம்.-60 ரக விமானங்களை சீனாவிடமிருந்து இலங்கை வாங்கியுள்ளது.

இவ்விமானங்கள் மார்ச் - மே மாதங்களுக்கிடையில் இலங்கையை வந்தடையவுள்ளன. 40 ஆசனங்கள் கொண்ட இந்த விமானங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.

இலங்கை விமானப்படை தனது வர்த்தக விமான சேவைகள் மூலம் கடந்த வருடம் 24 கோடி ரூபாவை அரசாங்கத்திற்கு வருமானமாக பெற்றுக்கொடுத்துள்ளது.

'உள்ளுர் விமான சேவைகளுக்கு  பெல் 212 மற்றும் பெல் 412 ஹெலிகொப்டர்களையும் வை-12 பயணிகள் விமானத்தையும் நாம் பயன்படுத்துகிறோம் 'என விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

'காங்கேசன்துறை, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், பலாலி மற்றும் பல இடங்களுக்கு நாம் விமானங்களைப் பயன்படுத்துகிறோம்.  திருகோணமலைக்கு சென்று வருவதற்கான செலவு ஒருவருக்கு 9200 ரூபா மாத்திரமே' எனவும் அவர் கூறினார்.

"எதிர்காலத்தல் நாம் முல்லைத்தீவு, இரணைமடு, ஓடுபாதைகளையும் புனரமைக்கவுள்ளளோம். இவ்விரு ஓடுபாதைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்மாணிக்கப்பட்டு, யுத்தத்தின் கடைசி கட்டத்தில் அவர்களாலேயே சேதப்படுத்தப்பட்டவையாகும்" எனவும் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--