Super User / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
30 லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றில் கொள்ளையிட்ட சந்தேக நபர்களை கல்கிஸை பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்குரஸ்ஸ நோக்கிச் சென்ற லொறியொன்யே கடத்தப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர தயா சமரவீர தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை இரத்மலானை மெலிபன் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் தான் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவைச் சேர்ந்தவரெனக் கூறிக்கொண்டு லொறியை சோதனையிட வேண்டும் எனக் கூறியபின்பே இந்த லொறி கடத்தப்பட்டிருநத்து.
'ஏனைய சந்தேக நபர்களுடன் வெள்ளை வான் ஒன்று அங்கு வந்தது. லொறியின் சாரதி கடத்தப்பட்டார். பின்னர் பண்டாரகமவில் வைத்து மற்றொரு லொறியில் பொருட்கள் ஏற்றப்பட்டன. லொறியின் உரிமையாளருடன் தொடர்புகொண்டு உரிய இடத்திற்குச் செல்ல தாமதம் ஏற்படும் எனக் கூறுமாறு சாரதி வற்புறுத்தப்பட்டார்' என பிரதி பொலிஸ்மா அதிபர் கூறினார்
தொலைபேசி இலக்கங்கள் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் களுத்துறை சிறையிலிருந்து தப்பி வந்தவர்.. மற்றொரு சந்தேக நபர் தேடப்படுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025