2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மத்திய கிழக்கு ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்ற வேண்டாம்: இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

Super User   / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

மத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்கள் அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்ற வேண்டாம் என கோரப்பட்டுள்ளதாக   பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசாரிக்குமாறு இலங்கைத் தூதரகங்களை  வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

மேற்படி ஆபத்;தான நிலைமையில் இலங்கை சம்பந்தப்படுவதற்கு தயாரில்லாததால் அந்நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிலும் பங்குபற்ற வேண்டாம் என இலங்கை மக்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நியோமால் பெரேரா டெய்லி மிரருக்கு கூறினார்.

பஹ்ரெய்ன், லிபியா ஆகிய நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை பஹ்ரெய்னுக்கு தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு நவம்பரில் 5929 இலங்கையர்கள் பஹ்ரெய்னுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்றிருந்தமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.  அதேவேளை லிபியாவுக்கு 161 இலங்கையரக்ள் சென்றிருந்தனர்.
 


  Comments - 0

 • Jesi Monday, 21 February 2011 06:09 AM

  இது என்ன கொடுமை சாரு? பொழைக்க விட மாட்டார் போல இரிக்கி ...ஓவர்டைம் தந்தால் போராட்டம் தொடரும்... டிய நண்பர்..

  Reply : 0       0

  xlntgson Tuesday, 22 February 2011 09:15 PM

  உபதேசங்கள் மீறப்படவே விடப்படுகின்றன, போக்குவரத்துச் சட்டங்களைப் போல்! "செத்தால் வகை சொல்ல மாட்டோம்", என்பதே மறைபொருள்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--