2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை - கட்டாருக்கிடையில் கூட்டு ஆணைக்குழு ஸ்தாபிக்க தீர்மானம்

Super User   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

இலங்கைக்கும் கட்டாருக்குமிடையில் வர்த்தக, முதலீட்டு, சுற்றுலா மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்,  அந்நாட்டு அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதே கூட்டு ஆணைக்குழு ஸ்தாபிப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டார் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீபா அல் தானி இவ்வருடத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பிற்கிணங்கவே அவர் இலங்கை வரவுள்ளார்.

இலங்கையின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் விஜயத்தின் போது கட்டார் விருப்பம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடருக்காக கட்டாரில் ஆரம்பிக்கப்படவுள்ள நிர்மாண பணிகளுக்காக தேவைப்படும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களில் அதிகமானோரை இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளவும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--