2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

எலி காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

Kogilavani   / 2011 பெப்ரவரி 21 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஏ. ஜயசேகர)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எலி காய்ச்சல் எனும்  leptospirosis    நோய் பரவும் வாய்ப்புள்ளதாக பொதுமக்களை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

முன்னர் இந்நோய் காணப்படாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  நோய் பரவியமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

அநுராதபுரம்,  பொலன்னறுவை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இந்நோய் பரவல் அதிகரித்துள்ளது. வெள்ளத்தின் பின்னர் கூடுதலான விழிப்பு நிலையில்  இருக்குமாறு மாகாண சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்தார்.

அதேவேளை,  நீண்டகாலமாக அதிக காய்ச்சல்,  கடுமையான முதுகெலும்பு வலி,  தாங்கமுடியாத தலை வலி,  தசை வலிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெறுமாறு நோயாளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--