Menaka Mookandi / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த இரண்டு வருடங்களுக்குள் கனேடிய கடற்கரைக்கு நூற்றுக்கணக்கான தமிழ் அகதிகளைக் கொண்டுசென்ற இரண்டு கப்பல்களில் ஒன்றான 'எம்வி ஓஷன் லேடி' என்ற கப்பலை கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் பார்வையிட்டுள்ளார்.
'எம்வி ஓஷன் லேடி' கப்பலானது கடந்த 2009ஆம் ஆண்டு 76 தமிழ் அகதிகளுடன் கனேடிய கடற்பரப்பைச் சென்றடைந்தது. இதைத் தவிர்ந்து 492 இலங்கை அகதிகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 'எம்வி சன் சீ' என்ற கப்பலும் மேற்படி கடற்பரப்பைச் சென்றடைந்தது.
இந்நிலையில், 'நாட்டுக்குள் மனித கடத்தலை மேற்கொண்டு வருவோர் மீது கனேடிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. கனேடிய குடிவரவு முறைமையை துஷ்பிரயோகம் செய்வதை அரசாங்கம் சகித்துக்கொள்ளாது என்ற செய்தியும் இதன்போது தெரியப்படுத்தப்படுகிறது' பிரதமர் காப்பர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
அத்துடன், 'நாம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளோம். இதன்மூலம் சட்டவிரோதமான குடிவரவுகள் தடுக்கப்படுகிறது. இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் கட்சிகள் தமது நிலைப்பாட்டைம மீள் பரிசீலனை செய்வதை நாம் விரும்புகின்றோம்.' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பழமைவாய்ந்த கட்சியின் புதிய சட்டங்கள் அகதிகளுக்கு தீங்கானது ன எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
29 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
39 minute ago
46 minute ago