Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாருக் தாஜுதீன்)
முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகாவின் றீட் அவெனியூவில் அமைந்திருந்த தேர்தல் அலுவலகத்திலிருந்து வழக்குக்காக எடுத்துவரப்பட்ட சான்றுப் பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் சந்தேக நபரான கப்டன் ஹரிபிரியா டி சில்வா, அரசாங்கத்தை கவிழ்க்க சதிசெய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதனாலேயே நீதிபதி இவ்வாறு கட்டளையிட்டார்.
இந்நிலையில் குறித்த அலுவலகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கனிணிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேறு பொருட்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதம நீதிபதி ரஷ்மி சிங்கபுலி உத்தரவிட்டார்.
இந்த கட்டளையின்படி கனிணிகளும் வேறு சில பொருட்களும் சரத்பொன்சேகாவின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago