2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மட்டு. அபிவிருத்தி கூட்டத்தில் த.தே.கூ. புறக்கணிப்பு: அரியநேத்திரன் எம்.பி. விசனம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 26 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு செயலகத்தில் நடைபெறவுள்ள வெள்ள நிவாரணம் சம்பந்தமான மீளாய்வு கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் விசனம் தெரிவிக்கிறார்.

நாளை நடைபெறவுள்ள மீளாய்வு கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைக்காமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையில்...

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு செயலகத்தில் வெள்ள நிவாரணம் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளும்படி மாவட்ட அரச அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்களுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை.

அபிவிருத்திக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாக இருக்கிறது என பறைசாற்றித்திரியும் இவர்கள், அபிவிருத்தி கூட்டங்களுக்கு எம்மை அழைக்காமல் விடுவது எந்தவகையில் நியாயம்? யாழ்ப்பாணத்திற்கு அமைச்சர் பஸில் சென்றபொழுது அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்களுக்கு சிறந்த மரியாதையை வழங்கினார்கள். ஆனால், மட்டக்களப்பில் இந்நிலை கொஞ்சமும் தென்படவில்லை.

மீளாய்வு கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உண்மையை வெளிப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்திலா? அல்லது கேள்விகளை கேட்டு சங்கடத்தில் ஆழ்த்திவிடுவார்கள் என்ற பயத்திலா? எம்மை அழைக்க அரச அதிபர் தயங்குகிறார்? என்ற கேள்வியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கேட்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .