Super User / 2011 மார்ச் 03 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ஸ்டெட் தெரிவித்தார்.
இவற்றை உருவாக்குவதற்காக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் ஊடகங்கள் ஈடுபடுவதுடன் காவல்காரர்களாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை இதழியல் கல்லூரியில் 2010ஆம் ஆண்டுக்கான பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய நோர்வே தூதுவர் மேலும் கூறுகையில்,
"இணையத்தளங்களினூடாக வரும் புதிய சந்தர்ப்பங்களுக்கு தொழில்சார் ஊடகவியலாளர்கள் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
எனினும் இணையத்தளங்களின் ஊடான சமூக ஊடகவியலுக்கு ஏற்ற வகையில் ஊடகவியலாளர்களும் மாற வேண்டும். ஊடகத்துறையில் விமர்சனம் மிக அவசியமாகும். அதேவேளை விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் 71 மாணவர்கள் சான்றிதழ் பெற்றதுடன் அச்சு துறையில் சிறந்த மாணவியாக மரியம் அஸ்வரும் வானொலி துறையில் சிறந்த மாணவியாக ஹர்ஸா ரூபரத்னவும் தொலைக்காட்சி துறையில் சிறந்த மாணவியாக ரூவானி கேடிபிலியும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
47 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
2 hours ago
5 hours ago