2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

விபத்தின் காரணமாகவே விமானி இறந்தார்: விமானப்படை தளபதி

Super User   / 2011 மார்ச் 04 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கம்பஹா வான் பரப்பில் கிபீர் விமானங்கள் ஒன்றுடனொன்று மோதியமையே பிளைட் லெப்டினன்ட் மொனாத் பெரேரா உயிரிழந்தமைக்கு காரணம் எனவும் அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்பட்டார் எனவும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷயல் ஹார்ஷா அபேவிக்ரம கூறியுள்ளர்.

'ஆனால் அவர் மாரடைப்பின் காரணமாக இறந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது குறித்து நான் எதுவும் கூற முடியாது' எனவும் விமானப்படை தளபதி தெரிவித்தார்.

'பிளைட் லெப்டினன்ட் மொனாத் சிறந்த ஆரோக்கியதுடன் இருந்த இளைஞர். மேனாத் போன்ற விமானிகள் கிரமமாக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். ஒரு மாதத்திற்கு முன்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது' என மொனாத் பெரேராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெரேராவின் வீட்டிற்குச் சென்றபோது அவரின் பெற்றோர்களிடம் விமானப்படைத் தளபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மொனாத் பெரேராவின் இறுதிச் சடங்குகளுக்கான செலவை ஏற்றுக்கொள்ளுமாறும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் விமானப்படைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் எனவும் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். (சஜீவ விஜேவீர)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--