Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 04 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
புலம்பெயர்ந்தோருடனான உறவுகள் மீள் நிர்மாணப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி தெரிவித்தார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லிவ் வட மாகாணத்திற்கு இந்த வாரம் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது யாழ், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்கள், யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புலம்பெயர்ந்துள்ளோரின் குடும்பங்கள் பல தற்போது இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஊடாக புலம்பெயர்ந்தோரை விணைத்திறனான முறையில் பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.
இதன்போது அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான நல்லிணக்க பேச்சுவார்த்தையை சுட்டிக்காட்டிய அவர், சரியான நேரத்தில் தீர்வு அமைய வேண்டும் என குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரா நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது அவர் கலந்துரையாடியதுடன் கனேடிய அரசின் உதவியால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டார்.
45 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago