Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 மார்ச் 04 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புலாகல, மன்னம்பிட்டிய, அரலங்கன்வில பகுதிகளிலுள்ள மக்கள் அரசியல் கட்சிகளோ சுயேட்சைக்குழுக்களோ தமது கிராமங்களுக்கு வருவதை தடை செய்துள்ளனர்.
தமக்கு மின்சாரம், பாதைகள் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இத்தீர்மானத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
வேரலக, வீரலண்ட, குடா சீகரிய இஹல யக்கல போன்ற கிராமங்களில் மக்கள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டிருப்பதாக நீதியானதும் நியாயமானதுமான தேர்தலக்கான மக்கள் இயக்கம் (பவ்ரல்) தெரிவித்துள்ளது.
வாக்கு சேகரிப்பதற்கான வேட்பாளர்கள் எவரும் எந்தவொரு வீட்டிற்கும் வரக்கூடாது என மேற்படி கிராமங்களின் வாசலில் பதாகையொன்று தொங்கவிடப்பட்டிருப்பதாக பவ்ரல் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் அதிகளவிலான தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக பவ்ரல் அமைப்பிடம் ஐக்கிய தேசியக் கட்சி புகாரிட்டுள்ளது. (KB)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025