Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 31 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ். செல்வநாயகம்)
ஜனாதிபதிக்கு எதிராக சுவரொட்டி அச்சிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட நபர், தான் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று வாபஸ் பெற்றுள்ளார்.
அச்சகமொன்றின் உரிமையாளரான ஜயம்பதி புளத்சிங்கள எனும் இந்நபர், தனக்கு எதிராக கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து தான் விடுதலை செய்யப்பட்டதையடுத்து தனது அடிப்படை உரிமை மீறல் மனுவை வாபஸ் பெறுவதாக நேற்று உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.
18 ஆவது திருத்தச்சட்டத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக சுவரொட்டிகளை அச்சிட்ட குற்றச்சாட்டில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் ,தான் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை எனவும் தான் கட்சிகளுக்கிடையிலான அரசியல் மோதலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தனது அடிப்படை உரிமை மீறல்மனுவில் தெரிவித்திருந்தார்.
எனினும் இவ்விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக கங்கொடவில நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் கூறினார்.
அதையடுத்து நீதிபதிகள் ஷிரானி திலவர்தன, கே.ஸ்ரீபவன் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் இம்மனுவை தள்ளுபடி செய்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .