2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

காணி அனுமத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கடிதம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

வடகிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கான  காணி அனுமதிப்பத்திரங்கள் பல வருடகாலமாக வழங்கப்படாமலிருப்பது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோனிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வடகிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக வாழ்ந்து வரும் மக்களினுடைய காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இதுவரையில் வழங்கப்படாமலுள்ளது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களின் கீழ், காணி அனுமதிப்பத்திரங்கள்  இல்லாதவர்களுக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக வீட்டு மானியம் மற்றும் வீட்டுக்கடன் போன்றவை அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். காரணம் இதற்கான தீர்வு இதுவரையில் எவராலும்  முன்வைக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .