2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தலைமைத்துவ பயிற்சியின் நிமித்தம் மதிலிலிருந்து பாய முற்பட்ட மாணவி தவறி விழுந்ததில் கால் முறிவு

Menaka Mookandi   / 2011 ஜூன் 09 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(உபாலி ஆனந்த)

மாதுருஓயா இராணுவ முகாமில் தலைமைத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவியொருவர் பயிற்சியின் நிமித்தம் சுமார் ஐந்து அடி உயரமான மதிலொன்றிலிருந்து பாய முற்பட்டதில் தவறி விழுந்ததால் இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது என அம்மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில், அநுராதபுரம், தேவனம்பியதிஸ்ஸபுர, திஸாவௌயைச் சேர்ந்த கே.எஸ்.செவ்வந்தி (வயது 22) என்ற மாணவியின் காலிலேயே இவ்வாறு முறிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 22ஆம் திகதி குறித்த முகாமுக்கு தலைமைத்துவப் பயிற்சி பெறுவதற்காகச் சென்ற இந்த மாணவி 30ஆம் திகதி இடம்பெற்ற மதில் தாண்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு குறித்த முகாமில் வைத்து இரு தினங்களாக தற்காலிக சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் பின்னர் அரலகன்வில பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட காலை சுமார் 3 மாதங்கள் வரையில் நிலத்தில் வைக்கக் கூடாது என அம்மாணவிக்கு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • xlntgson 0776994341;0716597735 sms only Friday, 10 June 2011 09:02 PM

  தேசபக்தி:
  வேண்டும் வேண்டும் உந்தன் உறவு, வெண்பனி திங்கள் உள்ள வரையில், வெண்பனி திங்கள் உள்ள வரையில்!

  Reply : 0       0

  Athambawa Abdul Jabbar Saturday, 11 June 2011 03:21 AM

  சபாஸ் நல்ல பயிற்சி. தொடர்ந்து செய்து மற்ற மாணவர்களின் கால்களையும் உடைங்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .