2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இந்திய உயர்மட்ட குழு இலங்கை வந்தது

Suganthini Ratnam   / 2011 ஜூன் 10 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய உயர்மட்ட குழுவினர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.  இலங்கை வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழுவினர் இன்று நண்பகல் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். நாளை நண்பகல் இவர்கள் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னராக நாளை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

இந்திய உயர்மட்ட குழுவில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்;குமார் ஆகியோர் அடங்குகின்றனர்.   (DS) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X