2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்

Super User   / 2011 ஜூன் 11 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.

இவ்வருடம் முதல் 5 மாதகால பகுதியில 68,830 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறையினர்  வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில்  இலங்கைக்கு வந்த இந்திய சுற்றுலா பயணிகளைவிட 54.5 சதவீதமாகும். மொத்த இந்தியர்களுக்கு அடுத்ததாக பிரித்தானியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இக்காலப்பகுதியில் 41,474 சுற்றுலா பயணிகள் (7.1 சதவீத அதிகரிப்பு) இலங்கைக்கு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் சுற்றுலா பயணிகளின் 98.1 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் 6027 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த வருடம் முழுவதும் சுமார் 650000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வருடம் இந்த எண்ணிக்கை 100,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


  Comments - 0

 • xlntgson Saturday, 11 June 2011 11:47 PM

  ஜெயலலிதா மத்திய அரசோடு இணைந்து பொருளாதார தடையை விதிக்கத்தான் போகிறார் என்பது போல் தேசப்பற்று இயக்க குணதாச அமரதாச கூறி இருக்கிறார். இது சரியான ஒரு தமாஷ்!
  இந்தியப் பயணிகள் தாம் இலங்கைக்கு அதிகம் வருகிறார்கள் என்பது இந்தக் கட்டத்தில் நல்ல செய்தி. அதுவும் இந்தியாவில் தமிழகம் தவிர்ந்த ஏனைய மாநிலங்களில் மட்டும் இருந்து வருகின்றார்களா? தமிழர்கள் போக வர கூடாது என்று ஜெயலலிதா தடை விதிப்பாரா? தனது உற்றார் உறவினரை போய் பார்க்கிறவர்கள் இலங்கைப் பொருட்களை எடுத்துச் செல்ல மாட்டார்களா?

  Reply : 0       0

  sabri Sunday, 12 June 2011 08:09 PM

  சரியாக சொன்னீங்க......மக்கள் மனதில் தற்போது ஓரளவு சுதந்திரமாக வாழ்கின்றோம் என்ற நம்பிக்கையும் எண்ணமும் தோன்றுகின்ற இவ்வேளையில் தமிழ் நாட்டு அரசாங்கம் இலங்கை தமிழ் மக்களை ஒரு பகடைக்காயாக தனது சொந்த அரசியல் வயிறு நிரப்பலுக்காக பயன்படுத்துகிறது என்பதை நாம் மேலும் புரிந்து கொள்ளவேண்டும்.........

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .