Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 12 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். குடாநாட்டின் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அதற்குரிய ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். இராணுவ புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்று இரவு 8 மணியளவில் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். இத்தேடுதலின்போது கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் 60 தோட்டாக்கள் அடங்கிய இரண்டு மகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேடுதல் நடந்தவேளையில் குமரன் குறித்த விட்டில் இருக்கவில்லை எனவும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை தற்சமயம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .