2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

வட,கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு; நாடாளுமன்றத்திடம் பொறுப்பு கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பொறுப்பினை நாடாளுமன்றத்திடம் கையளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக சர்வகட்சிகளையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வாரத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளார் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வ கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமித்து அதனூடாக வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வினை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ள அரசாங்கம், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெறுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • sabri Tuesday, 14 June 2011 08:32 PM

    ennadhaan nadakkum nadakkattumae! iruttinil needhi maraiyattumae!! thannaalae veli varum thayangaadhae, oru thalaivan irukkiraan mayangaadhae... oru thalaivan irukkiraan mayangaadhae....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .