2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

'நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான உபாயம்'

Super User   / 2011 ஜூன் 15 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

அரசியல் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு உபாயமாகும் என  ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் இன்று விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையின்படி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

கடந்த வருடம் தானும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவரான சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் இணைந்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையின் உள்ளடக்கங்களை வெளியிட்டதாக தெரிவித்த ஆர். யோகராஜன், அவ்வறிக்கை ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளாலும் தயாரிக்கப்பட்டதாகும் எனவும் அவர் கூறினார்.

'எனவே தீர்வை தாமதிப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த காலம் கடத்தும் தந்திரோபயங்கள் தொடர்ந்தால் அரசியல் தீர்வுக்கு சர்வதேச ஆதரவை கோரும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுவார்கள்' எனவும் அவர் கூறினார
 


  Comments - 0

 • maankaai madayar. Saturday, 18 June 2011 01:10 PM

  பாராளுமன்றத்தில்தான் தீர்வு என்றால் ஜனாதிபதி முறையை நீக்கிவிடு .

  Reply : 0       0

  ajan Thursday, 16 June 2011 04:09 AM

  முற்றிலும் உண்மை

  Reply : 0       0

  xlntgson Thursday, 16 June 2011 09:01 PM

  பரஸ்பர விரோதம்! பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்தாலும் சுண்டைக்காய் 'சைஸ்' தான்! எதிர்க்கட்சிகள் ஒரு போதும் ஒன்று சேரப் போவதும் இல்லை, மேலும் எதிர்க்கட்சிகளின் கருத்துகள் மதிக்கப்படும் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை முந்தைய அனுபவங்களில் இருந்து தெரியவருகிறது. பாராளுமன்றத்திடம் ஒரு பலமும் இல்லை. ஜனாதிபதி நினைத்தால் அதை பயன்படுத்திக்கொள்ள முடியுமென்பதைத் தவிர! பாராளுமன்றத்துக்கு வேலை கொடுக்க இந்த தெரிவுக் குழுக்கள் தேவைதான் அதுவும் இல்லாவிட்டால் தெரிவுக் குழுவுக்கு விடு விடு என கூவலாம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .