Super User / 2011 ஜூன் 15 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்த்ய சேனாநாயக்க)
இலங்கை தொடர்பான ஆவணப்படமொன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட பின், தெற்காசியாவுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.
'இலங்கை அரசாங்கம் தனது சொந்தப் பிரஜைகைளை வேண்டுமென்ற இலக்கு வைப்பதாக மேற்படி வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதியாக மறுப்பதை, தெற்காசியாவுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கவனத்திற்கொள்ளாதமை குறித்து அரசாங்கம் கவலைகொண்டுள்ளது' என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நண்பர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் அல்லாமல், 3 தசாப்தகால யுத்தத்தில் இழந்தவற்றை மீள ஸ்தாபிப்பதற்கும் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கி விரைவாக முன்னேறுவதற்கான உதவிகளே தேவைப்படும் நிலையில் இந்த ஆவணப்படம் ஒளிரப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சனல் 4 ஆவணப்படமானது தருமஸ் அறிக்கையைப் போன்றதே எனவும் முன்கூட்டியே மேற்கொண்ட தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்காக சம்பவங்களையும் புகைப்படங்களையும் வரிசைப்படுத்தியதைத் தவிர வேறெதையும் அது செய்யவில்லை எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த படத்திற்கான மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரை எவரும் அதன் உள்ளடக்கத்திற்கு பொறுப்பேற்கவும் இல்லை என அரசாங்கம் கூறியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினின் இணையத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களின் சிறு பகுதியினாலும் முன்னர் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளையே சனல்4 ஜூன் 14 ஆம் திகதி ஒளிபரப்பிய ஆவணப்படம் கொண்டுள்ளது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
13 minute ago
23 minute ago
24 minute ago
28 minute ago
ajan Thursday, 16 June 2011 05:31 AM
அரசின் பதில் வேடிக்கையாக இருக்கிறது
உண்மையான நல்லிணக்கம் , அபிவிருத்தி என்பது உறுதியான, இறுதியான நீதி கிடைப்பது மூலமே நெடுநாள் நிலைத்து நிக்கும் என்பதை உலகம் தெளிவாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. எதை மறைத்தாலும் எல்லாவற்றையும் தாண்டி உண்மை வெளிவரும்.
Reply : 0 0
Illankayan Thursday, 16 June 2011 10:03 AM
தமிழர்கள் என்ற காரணத்தால் கொன்றார்கள். இனகலவரங்கள்.. இடங்கள் பெயர் மாற்றம். தமிழ் இடங்களை சிங்கள மயமாக்குவது இது எல்லாம் என்ன என்று நினைக்கினும்? எத்தனை நாட்களுக்கு பொய் சொல்ல முடியும்? மறுத்துக்கொண்டே இருக்க முடியும்? காலம் பதில் சொல்லும். உண்மை வெளிவரும். நீதி கிடைக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
24 minute ago
28 minute ago