Menaka Mookandi / 2011 ஜூன் 20 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
கொழும்பு மாநகரசபை தேர்தல் தொடர்பான ஆயத்தங்களை உடனடியாகத் தொடங்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு கட்டளையிடும்படி உயர்நீதிமன்றத்தை கோரும் அடிப்படை உரிமை மனுவொன்று இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாநகரசபைக் கட்டளைச் சட்டம், உள்ளூராட்சி அதிகார தேர்தல் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைய கொழும்பு மாநகரசபை தேர்தல் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியிருக்க வேண்டும் என இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டப்படி கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறாதவிடத்து ஒமர் காமில் விசேட ஆணையாளரின் அதிகாரங்களை பிரயோகிப்பது சட்டத்துக்கு முரணானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago