2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 23 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஏ ஜயசேகர)

பிள்ளைகள் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகும்போது அவர்களை வீடுகளில் வைத்திருக்காது அருகிலுள்ள தகுதிவாய்ந்த வைத்தியரை நாடி  சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியசர்கள் சிபாரிசு செய்த மருந்துகளை மாத்திரம் வழங்குமாறும் பெற்றோர்களுக்கு, வைத்தியர்கள் நேற்று அறிவுறுத்தியுள்ளனர்.

நாடெங்கிலும் பிள்ளைகள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. பிள்ளைகளுக்கு தகுதி வாய்ந்த வைத்தியரினால் வழங்கப்படும் சிகிச்சை மூன்று நாட்களின் பின்னரும் பலனளிக்காதுவிடின்   பெற்றோர்கள் வைத்தியசாலையை நாடவேண்டுமென லேடிரிஜ்வே பணிப்பாளர் வைத்தியர் ரட்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக கூடிய விரைவில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை வார்ட்டுகளுடன் நிரம்பியுள்ளதாக அவர் கூறினார்;.

இந்த வைரஸ் காய்ச்சலுக்கு சாதாரண அறிகுறியாக தாகம்,  வயிற்றுவலி, வாந்திபேதி போன்ற குணங்குறிகள் காணப்படுகின்றன.  

தற்போது டெங்குநோய்த் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற இந்த வேளையில், வைரஸ் காய்ச்சலா அல்லது டெங்குநோயா என்று  குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.  வைத்திய ஆலோசனை இல்லாமல் வழங்கப்படும் சில மருந்துகள் ஆபத்தாக முடியுமெனவும் குறிப்பிட்டார்.

லேடிரிஜ்வே வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 1,500 குழந்தைகள் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக எதி;ர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

வெளிநோயாளர் பிரிவில் சுமார் 1000 நோயாளர்களும் 200 பேர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனரெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .