2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

அமைச்சரின் நிர்வாகப் பணிகளில் நாடாளுமன்ற ஊழியர்களா? விசாரணைக்கு உத்தரவு

Super User   / 2011 ஜூன் 24 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்ற ஊழியர்கள் சிலர் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு முகவரியிடப்பட்ட கடிதங்களை கிறகரி வீதியிலுள்ள அமைச்சரின் வாசஸ்தலத்திற்கு அனுப்புவதற்குப் பதிலாக அவரின் நிர்வாக அலுவலகத்தில்  கையளிக்குமாறு படைக்கல சேவிதர் உட்பட நாடாளுமன்ற ஊழியர்கள் சிலரை நாடாளுமன்ற செயலாளர் பணித்திருந்தாக ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

சில அமைச்சர்களின் கடமைகளில் நாடாளுமன்ற ஊழியர்களை எப்படி ஈடுபடுத்த முடியும் என தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பினார்.
அதையடுத்தே சபாநாயகர் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.  (KB/YP)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .