Suganthini Ratnam / 2011 ஜூலை 17 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் மாலைதீவு நாணயங்களுக்கிடையிலான நேரடிப் பரிமாற்றம் குறித்த கலந்துரையாடல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாலைதீவு அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
இலங்கை ரூபா மற்றும் மாலைதீவு ரூபியாவுக்கிடையிலான நேரடிப் பணப்பரிமாற்றம் குறித்த நடவடிக்கைகளில்; இரு நாடுகளினதும் நிதி சம்பந்தமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மஹ்மூத்; ரஸி கூறினார்.
நாணயப் பரிமாற்றம் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மாலைதீவு ஜனாதிபதி முஹம்மத் நஸீட்டும் முன்னர் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இத்திட்டம் தாமதமடைவதற்கான காரணம் என்னவெனக் கூற அவர் மறுத்து விட்டார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் மாலைதீவு ஜனாதிபதி கலந்துகொண்டார். அப்போது இரு நாடுகளின் நேரடி நாணயப் பரிமாற்றம் குறித்து அவர் கலந்துரையாடினார். (DM)
2 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025