2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கை விவகாரம் குறித்து ஜெயாவுடன் ஹிலாரி கலந்துரையாடுவார்: பிளெக்

Super User   / 2011 ஜூலை 18 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் தனது தமிழக விஜயத்தின்போது இலங்கை விவகாரம் குறித்தும் கலந்துரையாடுவார் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார்.

ஹிலாரி கிளிண்டன் நாளை செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்விஜயத்தின்போது அவர் சென்னைக்கும் சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கலந்துரையாடவுள்ளார். அமெரிக்க ராஜாங்கச்செயலர் ஒருவர் தமிழகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

இவ்விஜயம் முற்றுமுழுதாக அரசு சார்பற்றதாக இருக்கம் எனவும் வெளிவிவகார விடயங்கள் தொடர்பாக, குறிப்பாக இலங்கை விவகாரம் குறித்து சென்னையில் ஹிலாரி கலந்துரையாட மாட்டார் எனவும் அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

ஆனால், ஹிலாரிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான கலந்துரையாடல்களில் நிச்சயம் இலங்கை விவகாரமும் இடம்பெறும் என அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார். ஹிலாரி கிளின்டனுடன் ரொபர்ட் பிளெக்கும் சென்னைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'வெளிப்படையாக தமிழ் நாட்டிலுள்ள 60 மில்லியன் மக்கள் இலங்கை நிலைவரம் குறித்து அதகி கரிசனைகளை கொண்டிருக்கின்றனர். உள்ளனர். இது ராஜாங்கச் செயலருக்கும் தமிழக முதலமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலில் ஒரு பகுதியாக இருக்கும் என நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

 
 


  Comments - 0

  • aj Monday, 18 July 2011 09:25 PM

    பல அமைப்புகள் தமிழக முதல்வருடன் தமிழர் தொடர்பாக பேச வேண்டும் என்று சொல்லிவந்த நிலையில் இந்த செய்தி வந்து இருக்கிறது .
    வாவ் இந்த செய்தி மேலும் நம்பிக்கை தருகிறது .
    தமிழக அரசு வெறும் மாநில அரசு அதுக்கு எதுவித அதிகாரம் இல்லை , நாங்கள் அக்கறைகொள்ள தேவை இல்லை என்று எல்லாம் லங்கா சொல்லும் ஆனாலும் இந்த சந்திப்பு நிறைய விடையங்களை மறைமுகமாக சொல்லுகிறது.
    ரொபர்ட் அவர்களின் கருத்துகளும் இங்கு கவனிக்க தக்கது.

    Reply : 0       0

    aj Monday, 18 July 2011 09:28 PM

    ரொபர்ட் அவர்களுக்கு இருக்கும் தமிழக தமிழர்கள் ஈழ தமிழர்கள் தொடர்பான புரிதல் கூட எங்கள் மக்களுக்கு இல்லை.
    எப்படி இருந்த போதும் இந்த விடையம் நிச்சயம் மேலும் லங்காவுக்கு அழுத்தம் கொடுக்க போகிறது என்பது மட்டும் உண்மை.

    Reply : 0       0

    meaw Tuesday, 19 July 2011 06:06 AM

    he he he .., nalla comady

    Reply : 0       0

    vaikuntha kurukal Tuesday, 19 July 2011 09:25 AM

    த‌மிழ‌க‌ப் ப‌த்திரிகைக‌ளில் க‌ட‌ந்த‌ வாரத்‌ த‌லைப்புச் செய்தி "சென்னை அமெரிக்காவின் பொருளாதார‌ மைய‌மாக‌த் திக‌ழ்கிற‌து", என‌ அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தி பாராக் ஒபாமா தெரிவித்தார் என்ப‌தாகும். இந்நிலையில‌ ஹிலாரி ‍ஜெயா ச‌ந்திப்பான‌து இல‌ங்கைப் பிர‌ச்சினையில் த‌ட‌புட‌லான‌ விருந்துக்குப் பின் வெற்றிலை பாக்கு போடுவ‌து போல‌வாகும். அத்துட‌ன் ம‌த்திய‌ அர‌சாங்க‌த்தின் கொள்கைக‌ளை மீறி முத‌ல‌மைச்ச‌ர் ஜெய‌ல‌லிதா இல‌ங்கைப் பிர‌ச்சனைக‌ளில் த‌லையிட‌ விரும்ப‌மாட்டார். அத்துட‌ன் ம‌த்திய‌ அர‌சை ப‌கைக்க‌வும் விரும்ப‌மாட்டார். ஜெய‌ல‌லிதாவுக்கு இல‌ங்கைத் த‌மிழ‌ரின் பிர‌ச்சினை எந்த‌க் க‌ப்ப‌லில் சென்றாலும் க‌ரை சேர்ந்தால் ச‌ரி என்ப‌தாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X