Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஜூலை 19 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல் மற்றும் ஏனைய முறைகேடுகள் தொடர்ந்தால் தேர்தலை இரத்துச்செய்ய அல்லது ஒத்திவைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தள்ளார்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல், சட்டவிரோத பதாகைகள், சுவரொட்டிகள், கட்சியினுள்ளே மற்றும் கட்சிகளுக்கிடையிலான வன்முறைகள் ஆகியன பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளினால் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
சட்டவிரோத பதாகைகளை இன்று நண்பகலுக்குள் அகற்றுமாறும் பொலிஸாருக்கு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அரச சொத்துக்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என அரச நிறுவனங்களின் தலைவர்களிடம் தான் முன்னர் அறிவுறுத்தியதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார். எனினும் தற்போதுள்ள சட்டத்தின்படி, தனது அறிவுறுத்தலை எவரும் புறக்கணித்தால் எதையும் செய்வதற்கு தனக்கு அதிகாரமில்லை எனவும் அவர் கூறினார்.
எவ்வாறெனினும் தேர்தல்விதி மீறல்கள் தொடர்ந்தால் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் கூறியதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார். (KB)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
38 minute ago
1 hours ago