2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஏனையோருக்கு பாதகமாகக் கூடாது; கவனமாக இருக்கிறது அரசு: யாப்பா

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.மேனகா)

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

 

இவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வு ஏனையோருக்கு பாதகமாக அமையாத வகையில் வழங்கப்பட வேண்டும். அதில் அரசாங்கம் மிகக் கவனமாகவும் அவதானமாகவும் இருந்து வருகின்றது என அரசாங்கம் இன்று அறிவித்தது.

யுத்தமொன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பது போன்று அரசியல் தீர்வொன்றை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க முடியாது. நல்ல பிரதிபலன் கிடைக்கும் வகையில் அந்த அரசியல் தீர்வு அமையப்பெற வேண்டும் என்று ஊடகத்துறை பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'தமிழ் மக்களுக்காக முன்வைக்கப்படும் அரசியல் தீர்வு, அம்மக்களுக்கும் நாட்டுக்கும் உகந்ததாகவும் அமையப்பெற வேண்டும். அதனாலேயே அந்தத் தீர்வினை வழங்குவதில் அரசாங்கத்துக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நிச்சயமாகத் தொடரும்.

தமிழ்க் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினூடான தீர்மானம் ஆகியவற்றினூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை எட்ட முடியும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க விரும்பாத கட்சியினர், அலரி மாளிகையில் வழங்கப்படும் கோப்பியைப் பருகியோ அல்லது அரசாங்கத்துடன் பேச்சுக்கு தயாரில்லை என்று கருதும் கட்சியினர் நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தேநீரைப் பருகியோ அரசியல் தீர்வை நோக்கிப் பயணிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


  Comments - 0

 • xlntgson Saturday, 17 September 2011 09:36 PM

  ஏனையோர் என்றால் யாரென்று தெளிவாக கூறவேண்டும்!

  Reply : 0       0

  Whistle Blower Friday, 16 September 2011 01:26 AM

  இவருக்கு எதனை மாகாணம் இருக்கு என்றே தெரியாது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .