Super User / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் இன்று திங்கட்கிழமை முதல் திருகோணமலையில் கூட்டு கடற்படை பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் 24 ஆம் திகதிவரை இப்பயிற்சிகள் தொடரவுள்ளன.
இப்பயிற்சி நடவடிக்கைக்கு 'ளுடுஐNநுஓ ஐஐ என பெயரிடப்பட்டுள்ளது.
கூட்டு கடற்படை நடவடிக்கை எனும் எண்ணக்கருவுக்கான ஒத்திகையாகவும் இருநாடுகளின் கடற்படைகளின் திறமைகளை அதிகரிக்கச் செய்யவும் பரஸ்பரம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் இப்பயிற்சித் திட்டம் உதவும் எனக் கருதப்படுகிறது.
இலங்கைக் கடற்படையின் ரோந்து படகுகள், அதிவேக ஏவுகணைக் கலம், அதிவேக 'கன்போட்' ரக படகுகள், விரைவுத் தாக்குதல் படகுகள் என்பன இப்பயிற்சிகளில் பங்குபற்றவுள்ளன.
இந்திய கடற்படையின்; நாசகாரி கப்பல், தரையிறக்க கப்பல் உட்பட பல கப்பல்களும் படகுகளும் இதில் பங்குபற்றவுள்ளன.
இப்பயிற்சிகளுக்கு முன்னதாக இந்திய கடற்படை அதிகாரிகளிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் பாக்கு நீரிணையில் போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் முதலானவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago