Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி முகத்திடலுக்கு அண்மையில் உள்ள பெறுமதிமிக்க 7 ஏக்கர் காணியை சீனாவின் தேசிய விமான தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கூட்டுத்தாபனத்துக்கு (CATIC) 99 வருட குத்தகையில் வழங்க அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில், அரசாங்க மதிப்பீட்டாளர் குத்தகை கொடுப்பனவுகளை கணிப்பிடும்படி கேட்கப்பட்டுள்ளார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.
இந்த காணியை 94.1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அல்லது 1000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்துக்கு கொடுத்த நெருக்கடி காரணமாக இந்த திர்மானம் மாற்றப்பட்டது. இதனால், பெருமளவு அந்நிய செலாவணி, இலங்கைக்கு கிடைக்காமல் போயுள்ளது என பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா குறிப்பிட்டார்.
சங்கிரி – லா ஹோட்டல் நிறுவனம், ஒரு ஏக்கருக்கு 12.5 மில்லியன் டொலர்களை விலையாகத் தந்தபோது CATIC கூட்டுத்தாபனம் 13.5 மில்லியன் டொலர்களைத் தர சம்மதித்தது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்தக் காணியை குறைந்தளவு குத்தகையில் 99 வருடங்களுக்கு கொடுக்க அரசாங்கம் தீர்மானித்தது. இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சித்தாலும் ஐ.தே.க, பல பில்லியன் பெறுமதியான காணிகளை சொற்ப தொகைக்கு தனியாருக்கு குத்தகைக்கு கொடுத்தது என பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
20 minute ago
23 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
56 minute ago