Super User / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
கட்சிக்குள் முரண்பாடு கொண்ட பிரிவினருடன் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்கான சாத்தியங்களை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது. இதற்குப் பதிலாக, இப்பிரச்சினையை அடுத்து எதிர்கொள்ள வேண்டியுள்ள அரசியல் சவால்கள் குறித்து அறிவூட்டுவதற்காக அடிமட்டத்தில் விளக்கக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
அண்மையில் மொனராகலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் உரையாற்றினார். கம்பஹாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உரையாற்றினார்.
அதேவேளை, மாற்றுக் கருத்து கொண்டவர்களும் தமக்கு விசுவாசமானவர்களிடம் இத்தகைய விளக்கக்கூட்டங்களை நடத்தியுள்ளனர். அனைத்துப் பல்கைல்ககழக மாணவர் ஒன்றித்தின் முன்னாள் தலைவர்களான சமீர கொஸ்வத்த, துமிந்த நகமுவ, ரவீந்திர முதலிகே மற்றும் மத்திய குழுவிலிருந்து விலக்கப்பட்ட புபுது ஜாகொட ஆகியோர் பிரேம்குமார் குணரட்ணம் அல்லது குமார் மாத்தயா தலைமையிலான மாற்று அணி சார்பிலான பிரச்சாரங்களில் முன்னணியில் உள்ளனர்.
இரு பிரிவினரும் மீண்டும் இணைவதென்பது ஒரு கனவாகும் என ஜே.வி.பி. பிரசார செயலாளர் விஜித ஹேரத் கூறினார். 'அவர்களுடன் இப்போது நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது' என கேள்வி எழுப்பினார். அதேவேளை தலைமையுடன் முரண்பட்டுள்ள குழுவினருக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக முரண்பாட்டு குழுவினரின் கருத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
18 minute ago
29 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
54 minute ago
1 hours ago