Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு முன்கூட்டியே இணையத்தளம் மூலம் விஸா வழங்கும் திட்டத்தை (ETA) இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.
78 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, விளையாட்டு, கலாசரா நிகழ்ச்சிகள், வர்த்தகம் முதலானவற்றுக்கான விஸாவுக்கு www.eta.gov.lk எனும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விஸாவுக்கான அடிப்படை விபரங்கள் 9 மொழிகளில் வழங்கப்பட்டிருக்கும். எனினும் விண்ணப்பதாரிகள் ஆங்கில மொழியில் மாத்திரமே விண்ணப்படிவத்தை நிரப்ப வேண்டும் என இத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இலத்திரனியல் விஸாவுக்கு கட்டணமொன்றை அறவிட குடிவரவு திணைக்களம் உத்தேசித்துள்ளது.
சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு நாட்டவர்களுக்கு மாத்திரம் இலங்கையை வந்தடைந்தவுடன் இலவசமாக விஸா வழங்கும் நடைமுறை தொடர்ந்து நீடிக்கும். தற்போது இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களுக்கு இலங்கையை வந்தடைந்தவுடன் விஸா வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதே சலுகையை இலங்கையர்களுக்கு வழங்கும் சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே எதிர்காலத்தில் இச்சலுகை வழங்கப்படும்.
முன்னர் இருந்தைப் போலவே புதிய திட்டத்தின்படியும் விமான மற்றும் கப்பல் ஊழியர்கள் விஸா பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ, ராஜதந்திரி ரீதியில் இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களினூடாக முன்கூட்டியே விஸாவை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான விஸா இலவசமாக வழங்கப்படும்.
MA Thursday, 29 September 2011 06:07 PM
அரசாங்கத்தின் சிறந்த முடிவு.வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025