2021 மே 12, புதன்கிழமை

பனை அபிவிருத்திச் சபையின் வருமானம் அதிகரிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை பனை அபிவிருத்திச் சபை 2010 ஆம் ஆண்டில் 20 மில்லியன் ரூபாவை லாபமாக பெற்றுள்ளது. கடந்த வருடத்தைவிட இது 12 மில்லியன் ரூபா அதிகமாகும்.

பனை சார்ந்த சமூகத்தின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதிலும் பனை வளத்தை புதுப்பிப்பதிலும் பனை அபிவிருத்திச் சபை கவனம் செலுத்துவதாக சபையின் பொதுமுகாமையாளர் எம்.பி. லோகநாதன் தெரிவித்தார்.

 பனை உற்பத்தி பொருட்களை பிரபல்யப்படுத்துவதற்கான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள், இப்பொருட்கள் சுரண்டப்படுதை தடுக்கும் நடவடிக்கைகள், பனை சார்ந்த கைவிணைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இத்துறையில் ஈடுபடும் பெண்கள் குழுக்களை அமைத்தல் என்பனவற்றிலும் இச்சபை கவனம் செலுத்துவதாகவும் அவர்கூறினார்.

2008 ஆம் ஆண்டு இச்சபை நஷ்டத்தில் இயங்கியபோதிலும் கடந்தவருடம் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை தரமுயர்த்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதுவே திடீர் வருமானஅதிகரிப்புக்கு காரணம் எனவும் லோகநாதன் தெரிவித்தார்.

நாட்டின் தென்பகுதியில் பனை உற்பத்திப் பொருட்களின் விற்பனை நிலையங்களை அமைக்கவும் இப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் பனை அபிவிருத்திச் சபை திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .