2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

தர்கா நகர் கல்வியியல் கல்லூரி பீடாதிபதி நியமனம் தொடர்பாக வழக்கு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதியான யூ.எல்.எம்.புகாரி பெற்றுக் கொண்ட நியமனத்தை இரத்துச் செய்யும் கட்டளை மீதான இடைக்கால தடையுத்தரவை மேலும் நீடிக்க கோரும் மனுமீதான விசாரணை நவம்பர் 23 இல் நடைபெறும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

யூ.எல்.எம்.புகாரி தாக்கல் செய்த இந்த மனு, திருமதி என்.பீ.எ.ரஷீத் மேற்கூறிய பதவிக்கு நியமிக்கப்பட்தற்கு எதிரான இடைக்கால தடையுத்தரவை கோரும் மனுவாகவும் உள்ளது.

ஏற்கெனவே எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையிலான நீதிபதிகள் குழாம் இடைக்கால தடையுத்தரவை நவம்பர் 24 வரை நீடித்தது.

இந்த வழக்கின் மனுதாரர், தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது தான் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டதாகவும் தான் பதவி ஏற்றப்பின் சிலர் தனக்கு கிடைத்த பதவியை இரத்துச்செய்யுபம்படி அதிகாரிகளை தூண்டியதை தொடர்ந்து கல்வி அமைச்சின் செயலாளர் தனது நியமனத்தை இரத்துச் செய்து திருமதி ரஷீத் என்பவரை அப்பதவிக்கு நியமித்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்.

பெண்கள் அதிகமாக படிக்கும் இந்த கல்லூரிக்கு ஆண் ஒருவர் பீடாதிபதியாக இருப்பது பொருத்தமற்றது என சிலரால் கூறப்பட்டதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

மனுதாரர், தனக்கு கிடைத்த நியமனத்தை இரத்துச் செய்யும் தீர்மானத்தை செல்லுப்படியற்றதென அறிவிக்கும்படியும் திருமதி ரஷீத் பீடாதிபதியாக பெற்றுள்ள நியமனத்தை வலுவிழக்கச் செய்யும்படியும் தனது மனுவில் கோரியுள்ளார்.

மனுதாரர் சார்பில், சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசத்தின் நெறிப்படுத்தலின் கீழ் சட்டத்தரணி கம்ரன் அஸீஸ் ஆஜரானார். பிரதிவாதிகள் சார்பில் பாயிஸா மார்கார் முஸ்தபா ஆஜரானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--