2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இந்திய வெளிவிவகார செயலர் - த.தே.கூ. ஞாயிறன்று கொழும்பில் சந்திக்க ஏற்பாடு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்யும் இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவினரை சந்திக்கவுள்ளார் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினருடனான சந்திப்பு பெரும்பாலும் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிகின்றது. இதேவேளை, இன்று கொழும்பை வந்தடையும் மத்தாய், நாளை காலை யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றார்.

நிருபமாராவ் அமெரிக்காவின் இந்தியத்தூதராக நியமிக்கப்பட்ட பின்னர் ரஞ்சன் மத்தாய் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றார். அதன்பின்னர் மத்தாய் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--