2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

Super User   / 2011 ஒக்டோபர் 09 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால் தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் காயமடைந்ததாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களை இடைமறித்த இலங்கைக் கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்செய்ததாகவும் மீனவர்களை தடிகளால் தாக்கி, அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த பகுதியிலிருந்து வெளியேறச் செய்ததாகவும் தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கச்சதீவுக்கு அருகில் இந்திய கடலில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் இந்தியாவின் மீதான தாக்குதல் எனவும் இத்தாக்குதல்கள் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆராய வேண்டுமெனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்து ஒரு நாள் கடந்த நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. (பி.ரி.ஐ.)
 


  Comments - 0

  • anbhoo Sunday, 09 October 2011 11:29 PM

    லலிதாவின் நோக்கம் அது ........ திரும்ப திரும்ப ... இலங்கையின் எல்லைக்குள் வருவது .................... ஹ ஹ ஹ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--