Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சுகாதார சேவையை பெறுவதற்கான கட்டணமான 1000 ரூபாவை செலுத்தத் தவறியோருக்கு ஐக்கிய இராச்சியத்தின் உள்ளே வருவதற்கு அல்லது அங்கு தங்கியிருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுமென குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீன் அறிவித்துள்ளார்.
தேசிய சுகாதார சேவை ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரகத்திற்கு இந்த கட்டணத்தை செலுத்தாதவர்கள் பற்றி அறிவிக்கும். இவ்வாறான கட்டணங்களில் நிலுவை உள்ளோர் மீண்டும் நாட்டினுள் வருவதற்கு அல்லது விஸாவை நீடிக்க விண்ணப்பிக்கும் போது அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இந்தத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும். தேசிய சுகாதார சேவைக்கு வரவேண்டிய நிலுவையில் 94 சதவீதத்தை பெற்றுக்கொள்ள இந்த புதிய ஏற்பாடு வழிவகுக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago