Kogilavani / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கைத்தொழில் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தொழில் துறை அபிவிருத்தி, மீன் பிடித்துறை அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா இன்று வியாழக்கிழமை சீனா பயணமானார்.
இக்கண்காட்சி சீனாவின் குவாங் மாகாணத்தில் கன்ரன் நகரில் நடைபெறுகின்றது.
இதன்போது, இலங்கையின் கைத்தொழில் துறை அபிவிருத்தி தொடர்பாக சீன அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை நடத்த உள்ளதாகவும் இதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தினையும் சர்வதேச கைத்தொழில் உள்ள தொழில்நுட்பங்களையும் எமது நாட்டின் கைத்தொழில்துறை அபிவிருத்திக்குப் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்
அமைச்சருடன் அமைச்சின் செயலாளர் க. பத்மநாதன், அமைச்சரின் ஆலோசகர் ஏ.யூ.எல்.எம்.ஹில்மி ஆகியோரும் சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
17 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
49 minute ago
1 hours ago