2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சக்வித்தி மீது விரைவில் வழக்கு

Super User   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

சட்டத்துக்கு புறம்பான வகையில் நிதிநிறுவனம் ஒன்றை நடத்திய வாடிக்கையாளர்களின் 1060 மில்லியன் ரூபாவை மோசடி கையாடியதாக குற்றம் கூறப்படும் சக்வித்தி ரணசிங்க மற்றும் பல சந்தேக நபர்கள் மீது வெகுவிரைவில் கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நுகேகொடை நீதவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

பிரதான சந்தேக நபரான சக்வித்தி ரணசிங்கவின் மனைவி குமார அநுரதனி உட்பட பல சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படவுள்ளது. இவ்விவகாரத்தில் 2135 வாடிக்கையாளர்களின் பணத்தை 23 பேர் சந்தேக நபர்கள்;  மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இரண்டாவது சந்தேகநபரான அநுரதனியை பிணையில்விடக்கோரிய விண்ணப்பத்தை நீதவான் அநுரகுமார நிராகரித்தார். இவர் பிணையில் விடப்பட்டால் தடுவம் முதலாளிக்கு நடந்ததே நடக்கும் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச வழக்குரைஞர் திலீபா பீரிஸ் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X