Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
புறக்கோட்டையில் சட்டவிரோதமாக நிதிநிறுவனமொன்றை நடத்தியதுடன் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
புறக்கோட்டை 3 ஆம் குறுக்குத்தெருவில் வைத்துஅந்நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அந்நபர் சுமார் 20 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாகவும் அவரின் நடவடிக்கை காரணமாக அரசாங்கத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சந்தேக நபருடன் அவரின் உதவியாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 10 லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை ஒக்டோபர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago