2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் இரண்டாவது எரிவாயு கிணறு கண்டுபிடிப்பு

Super User   / 2011 நவம்பர் 14 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் மன்னார் கடற்படுகையில் இரண்டாவது இயற்கை வாயுக் கிணறை அப்பகுதியில் எரிபொருள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் கெய்ன் இந்தியா நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

எனினும் வர்த்தக ரீதியில் அங்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியுமா என்பதை அறிவதற்கு மேலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலின் அடியில் 4700 மீற்றர் ஆழத்தில் இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதியில் முதலாவது எரிவாயுக் கிணறை கண்டுபிடித்ததாக கடந்த ஒக்டோபர் மாதம் கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

 • meenavan Monday, 14 November 2011 09:46 PM

  எரி வாயு கிணறு கண்டுபிடிப்பு செய்தியாக உள்ளதே ஒழிய, எப்போது பொதுமகனின் பாவனைக்கு வரும் என்று சொல்வார்களா?

  Reply : 0       0

  hameed Monday, 14 November 2011 10:14 PM

  எரிவாயு செய்தி தொடர்ந்தும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. எரிவாயுவைதான் இன்னும் காணோம். எப்போது எங்கள் அடுப்பறையில் அது எரியும் சார் ?

  Reply : 0       0

  m jaleel kwt Tuesday, 15 November 2011 01:19 AM

  நீங்கள் நினைப்பது போல இல்லை. நாள் எடுக்கும். பொறுமையாக இருங்க.....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .