Suganthini Ratnam / 2011 நவம்பர் 18 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சட்ட, நிறைவேற்று, நீதி அதிகாரங்கள் கையளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரங்கள் கையளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்ற விடயங்கள் பற்றி விரிவாக ஆராய்வதற்காக அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5ஆம் 6ஆம் 14ஆம் 15ஆம் திகதிகளில் கூடிப் பேசவுள்ளன.
அடுத்த மாதம் அரசாங்கத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது பொலிஸ் மற்றும் நில அதிகாரங்கள், அதிகாரத்தை கையளிப்பதற்கான அலகு, ஆளுநர்களின் அதிகாரங்கள், அரசாங்கத்திடம் பாரப்படுத்தப்படவுள்ள அதிகாரங்கள் என்பவை உட்பட பல விடயங்கள் பேசப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது சபையொன்று அமைக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதையிட்டும் நாம் பேச வேண்டியுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கான அலகு வடக்காக இருக்க வேண்டுமா அல்லது மீண்டும் இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்காக இருக்க வேண்டுமா என்பதிலும் கருத்தொற்றுமை காணப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கான அலகு பற்றி தீர்மானிக்கும்போது முஸ்லிம்களின் நலன் கருத்திற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஐக்கியப்பட்ட பிரிக்கப்படாத இலங்கையினுள் தனது கட்சி நியாயமான நிலைபேறான நடைமுறைச் சாத்தியமான தீர்வைக் காண்பதில் உறுதியாகவுள்ளதெனக் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் பற்றி கேட்கப்பட்டபோது 'அதுவொரு பெரிய கதை'. எவ்வாறாயினும் அமெரிக்காவின் பிரதிநிதிகளுடனான பேச்சுக்கள் ஆக்கபூர்வமாக பயனுள்ளதாக அமைந்ததெனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய சந்திப்புக்களின்போது பிரதான பங்காளியான ரெலோவை புறக்கணிப்பதாக கூறப்படுவது பற்றி கேட்டபோது, யாரையும் புறக்கணிப்பதோ சேர்த்துக்கொள்வதோ எனது கட்சியின் தொழில் இல்லை. சூழ்நிலைக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
26 Oct 2025
26 Oct 2025
Pottuvilan Friday, 18 November 2011 08:41 PM
நிறைவேற்று அதிகாரம்? நடைமுறைக்கு சாத்தியமானதை கேளுங்க சார்
Reply : 0 0
Mohammed Hiraz Friday, 18 November 2011 09:40 PM
இந்த நாட்டில் உள்ள எந்த ஒரு முஸ்லிம் மக்களினதும் பாரம்பரிய காணிகள், வாழ்விடங்கள் சொத்துக்கள், நிர்வாகங்களை நிர்வகிக்கவோ ஆட்சிசெய்யவோ உங்களுக்கு எந்த தகுதியோ உரிமையோ கிடையாது. அத்தோடு அப்படி ஒரு நிலைமை இந்த அரசினால் எந்த ஒரு காலத்திலும் வழங்கபடவும் மாட்டாது.
Reply : 0 0
Ramesh Friday, 18 November 2011 10:30 PM
தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கிடைக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025