2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பார்வையற்றோருக்கான இலங்கையின் முதலாவது 'பிறெய்ல்' பத்திரிகை வெளியீடு

Super User   / 2011 நவம்பர் 18 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

பார்வைப் புலனற்றோர் வாசிக்கக்கூடிய 'பிறெய்ல் ' எழுத்துக்களிலிலான பத்திரிகை இரத்மலானையிலுள்ள விழிப்புலனற்றோருக்கான பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

'விஜய  பிறெய்ல் ' எனும் பெயரிலான இப்பத்திரிகை இலங்கையின் முதலாவது பிறெய்ல் பத்திரிகையாகும்.

வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இப்பத்திரிகை வெளியிடப்படவுள்ளது.

தமிழ் மிரர், டெய்லி மிரர், சண்டே டைம்ஸ், லங்கா தீப, விஜய், ஹாய், கோ உட்பட இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகைகளையும்  இணையத்தளங்களையும் வெளியிடும் விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்டினால் மேற்படி பிறெய்ல்  பத்திரிகையும் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செவிப்புலனற்ற மற்றும் விழிப்புனற்றோருக்கான பாடசாலையின் அதிபர் சந்தயா கொட்டுருஆரச்சி இவ்பைவத்தில் உரையாற்றுகையில்

இப்பிள்ளைகளுக்கு பிறெய்ல் எழுத்துகளிலான போதியளவு புத்தங்கள் கிடைப்பதில்லை எனவும் 'விஜய பிறெய்ல்' பத்திரிகை இந்நாட்டின் பார்வையற்ற பிள்ளைகளின் அறிவை விருத்தியாக்கும் எனவும் கூறினார்.

'ஒருவரின் தன்னையும் தனது அறிவையும் விருத்தியாக்குவதற்கு வாசிப்பு அவசியமாகும். தகவல்தொழில்நுட்ப அபிவிருத்தியடைந்து நிலையில் இத்தகைய பத்திரிகைகள் அவசியமாகும். அரசியலமைப்பில் எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான உரிமை குறிப்பிடப்பட்டுள்ளது. இது பார்வையற்றவர்களுக்கும் இப்போது அந்த உரிமை கிடைத்துள்ளது' என அவர் கூறினார்.

தகவல்களை அறியும் விடயத்தல் பெரும் அபிவிருத்தி ஏற்பட்டு;ள போதிலும் பார்வையற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டு;ள்ளது என பார்வையற்ற ஆசிரியைiயான தம்மிகா பிரியதர்ஷினி கூறினார். ' ' நாம் மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்பை வழங்கிய விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்' எனவும் அவர் கூறினார்.

விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் லால் ஜயவர்தன உரையாற்றுகையில் 'இவர்களுக்கு எமது அனுதாபம் அல்ல, மாறாக இவர்களின் சிறந்த வாழ்க்கைக்கான எமது உதவியே தேவைப்படுகிறது' என்றார். 


  Comments - 0

 • Ramesh Friday, 18 November 2011 08:04 PM

  பார்வையற்றோரின் சார்பில் நன்றிகள்

  Reply : 0       0

  nawas Saturday, 19 November 2011 07:56 PM

  நல்ல முயற்சி. பார்வை அற்றோர், பார்வை உள்ளவர்களை விட இறைவனிடம் நல்லவர்களாக இருப்பார்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X